நடிகர் அஜீத் தலைமறைவு!

Filed under: சினிமா |

IMG_4480தொடர்ந்து ‘ஆரம்பம்’, ‘வீரம்’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்த அஜீத் வெளியில் வராமல் வெற்றியைக்கண்டு ஆடாமல் தலைமறைவாக இருக்கிறார். நிருபர்களுக்கு பேட்டி தருவதுமில்லை. ஏன்? கவுதம்மேணன் இயக்கும் படத்தில் புதிய மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கவிருப்பதால் அந்த கெட் அப் வெளியே தெரியக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார், அஜீத். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களாவில் குடும்பத்துடன் ஜாலியாக பொழுதைகழிக்கும் அஜீத் நண்பர்களுடன் அளவளாவுவதையும் தவிர்க்கிறார்.
ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடியில் சிக்கித் தவிக்கும் அஜீத்திற்கு அதிலிருந்து மீண்டால்தான் படப்பிடிப்பு தொடங்கமுடியும் என்ற பரிதாபநிலை. வழக்குகளை தீர்த்தபின்பே படப்பிடிப்பு என்று தலயும் சொல்லி தலைமறைவாக நிம்மதியாக இருக்கிறார்.