நடிகர் கார்த்தி பாடிய பாடல் வைரல்!

Filed under: சினிமா |

நடிகர் கார்த்தி பிரபல நடிகர் நாகார்ஜுனா மனைவியும், நடிகையுமான அமலா நடிக்கும் படத்திற்காக ஒரு பாடல் பாடியுள்ளார். இப்பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி உள்ளது.

‘கணம்’ என்ற படம் ட்ரீம் வாரியர்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்காக ஒரு பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார். இப்பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரை உலகில் பல நடிகர்கள் பாடல்கள் பாடியுள்ள நிலையில் தற்போது கார்த்தியும் பாடலை பாடியுள்ளார்.