நடிகர் தனுஷ் சன் பிக்சர்ஸ் மேல் அதிருப்தி!

Filed under: சினிமா |

தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இத்திரைப்படம் அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ளது. படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் படத்தின் எதிர்பாராத வெற்றியால் தனுஷ் மகிழ்ச்சியாக இருந்தாலும், ரிலீஸுக்கு முன்னர் படத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் பாராமுகம் காட்டிய தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் மேல் அதிருப்தியில் உள்ளாராம். இதனால் சன் தொலைக்காட்சியில் நேர்காணலுக்கு கேட்ட போது கூட அதற்கு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.