நடிகர் வடிவேலு படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ்!

Filed under: சினிமா |

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், வடிவேலு நடிப்பில், சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவு பெற்றுள்ளது. இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் பிரபுதேவா. இப்பாடலுக்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாம். இப்பாடல் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

இப்படத்தை நவம்பரிலேயே இத்திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. படத்தின் இறுதிப் பணிகள் முடிந்து படம் 2மணிநேரம் 20 நிமிடம் ஓடும் விதமாக எடிட் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் சென்சார் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து டிசம்பர் 9ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை படத்தில் இடம்பெற்ற “பணக்காரன்” என்ற செகண்ட் சிங்கிள் பாடல் வெளிவந்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.