நடிகர் வடிவேலு பிறந்த நாள் கொண்டாட்டம்!

Filed under: சினிமா |

நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை “மாமன்னன்” படப்பிடிப்பில் படக்குழு கொண்டாடியுள்ளது.

உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ படப்பிடிப்பு நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “பரியேறும் பெருமாள்,” “கர்ணன்” ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாமன்னன்’. இத்திரைப்படத்தில் உதயநிதி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இவர்களுடன் வடிவேலு மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். உதயநிதியின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இன்றுடன் நிறைவுபெற்றுள்ளதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதையொட்டி உதயநிதி, மாரி செல்வராஜ் மற்றும் வடிவேலு உட்பட படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடினர். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாரி செல்வராஜ், “மாமன்னன் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. அத்தனையும் சாத்தியப்படுத்திய உதயநிதி சாருக்கும், ரெட் ஜெயண்ட் மூவிஸிக்கும் என் நன்றி. பெரும் உழைப்பை கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் அன்பும் பிரியமும்“ என்று பதிவிட்டுள்ளார்.