நடிகர் விஜய்க்கு 6 வில்லன்கள்!

Filed under: சினிமா |

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் 6 வில்லன்கள் அவருடன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்தை அடுத்து, விஜய் நடிக்கவுள்ள படம் விஜய் 67. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். “விக்ரம்“ படத்தின் வெற்றிக்குப் பின், லோகேஷ் மற்றும் விஜய் இணையவுள்ள படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளதால், சமூக வலைதளத்தில் இருந்து தற்காலிகமாக விலகவுள்ளதாக லோகேஷ் தெரிவித்துள்ளார். விஜய் 67 படத்தில், கே.ஜி.எஃப் -2 பட வில்லன் சஞ்சய் சத், மலையாள நடிகர் பிரித்விராஜ் உட்பட 6 பேர் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.