நடிகர் விஜய்யின் புதிய படம் அப்டேட்!

Filed under: சினிமா |

கடந்த சில வாரங்களாக நடிகர் விஜய்யின் அடுத்த படம் “தளபதி 66” படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இப்படத்தைப் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இதுகுறித்த செய்தி வெளியானது என்பதும் விஜய் சென்னை திரும்பி விட்டார். இருப்பினும் இந்த தகவலை தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக செட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் மெஹ்ரினா பிரஸிதா உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.