நடிகர் விஜய்யின் போட்டோ வைரல்!

Filed under: சினிமா |

நடிகர் விஜய் “வாரிசு” திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தற்போது, “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடித்தவர்கள் டப்பிங் பேசி வரும் நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. சமீபத்தில், “வாரிசு” திரைப்படத்தின் முதல் சிங்கில் எஸ்.தமன் இசையில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதில், விஜய்- ராஷ்மிகாவின் நடனமும், விவேக் எழுதிய பாடல் வரிகளும் ரசிகர்களை கவர்ந்தது. விரைவில் இப்படத்தில் டீசர் மற்றும் டிரெயிலரை எதிர்பார்த்து ரசிகர்கள் கார்த்திருக்கும் நிலையில், இப்பட ஷூட்டிங் ஸ்பாட்டிங் விஜய் கருப்பு கலர் காஸ்டியூமில் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.