நடிகர் விஜய் குறித்து பிரபல தயாரிப்பாளர்!

Filed under: சினிமா |

தமிழகம் முழுவதும் இரவு பாடசாலை நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வரும் 15ம் தேதி முதல் அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஏழை எளிய மக்கள் பள்ளிக்கு செல்ல முடியாதவர்கள் கல்வி பயில்வதற்கு பாடம் சொல்லிக் கொடுப்பார்கள் என்று கூறப்பட்டது. இது குறித்து பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறும்போது, “எத்தனையோ குழந்தைகள் இன்னமும் இரவு நேரம் படிக்க வசதி இல்லாமல் தவிக்கிறார்கள். மதிப்பெண்களால் வெற்றிபெற்று நாளிதழ்களில் மின்னொளியில் படித்தேன். மண்ணெண்ணெய் விளக்கில் படித்தேன் என மாணாக்கர்கள் சொல்லும்போதுதான் அவர்களின் வறுமை புரிய வருகிறது. அப்படியிருக்க, தமிழ் சினிமாவில் கோலோச்சும் நாயகன் விஜய் இரவுப் பாடசாலை திட்டத்தை செயல்படுத்த முன்வந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. தான் நிஜ கதாநாயகன் என தன் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டிருப்பது கல்விச் செல்வம் தளைக்க மிக மிக அவசியமானது. தொடர்க. வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.