நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் சூர்யா மறைமுகமாக மாணவ மாணவிகளின் கல்விக்கு உதவி செய்து வருவது போல் நடிகர் விஜய் வெளிப்படையாக அந்த உதவியை செய்கிறார் என தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சீமான், “நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலமாக பல ஆண்டுகளாக மறைமுகமாக செய்து வரும் சேவையை தான் விஜய் தற்போது வெளிப்படையாக செய்து வருகிறார். அவர் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர விரும்புவதால் இவ்வாறு செய்கிறார். ஆனால் அதே நேரத்தில் மாணவர்களை ஊக்கப்படுத்துவதை வரவேற்கலாம் பாராட்டலாம் மேலும் வாக்கு செலுத்துவதற்கு பணம் கொடுக்கக் கூடாது என தம்பி விஜய் பேசியதும் வரவேற்பு தக்கது. தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை வாழ்த்துகிறேன், ஆனால் என்னுடைய பாதை வேறு, அவருடைய பாதை வேறு, விஜய் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அவ்வாறு நினைப்பவரை தள்ளிவிடக்கூடாது, தட்டிக் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.