நடிகை சமந்தா பற்றி தவறான செய்தி!

Filed under: சினிமா |

நடிகை சமந்தா மறுபடியும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மறுபடியும் வெளியான தகவல் உண்மையல்ல என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகை சமந்தா உடல்நிலை மீண்டும் சிறிது மோசமாக இருப்பதாக ஒரு சில இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. அதற்கு சமந்தா தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். சமந்தா ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி முற்றிலும் தவறானது. சமந்தா வீட்டில்தான் இருக்கிறார். அவரது உடல் நலம் நல்ல படியாக இருக்கிறது. சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் தகவலை யாரும் நம்பவேண்டாம். தயவு செய்து இத்தகவலை யாரும் பரப்ப வேண்டாம் என்று சமந்தாவின் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சமந்தா உடல் நலத்துடன் வீட்டில்தான் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.