நடிகை சௌந்தர்யாவிடம் என் காதலை சொல்லியிருப்பேன்!

Filed under: சினிமா |

இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி “குஷ்பு என் வாழ்க்கையில் வரலன்னா நான் அந்த நடிகையிடம் என் காதலை சொல்லியிருப்பேன்” என்று வெட்கத்தை விட்டு கூறியுள்ளார்.

80களில் ரசிகர்களின் பேராதரைப் பெற்ற நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் கடந்த 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். திருமண வாழ்க்கைக்கு பிறகும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அரசியலிலும் குதித்தார். தற்போது குஷ்புவின் கணவர் சுந்தர் சி பேட்டியில், “எனக்கு நடிகை சௌந்தர்யாவை மிகவும் பிடிக்கும். அவர் தங்கமான குணம் கொண்ட பெண். என் வாழ்க்கையில் குஷ்பு மட்டும் வரவில்லை என்றால், நான் சௌந்தர்யாவிடம் என் காதலை சொல்லி திருமணம் செய்திருப்பேன்” என்று கூறியுள்ளார்.