நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது?

Filed under: அரசியல்,இந்தியா |

ஜனவரி 31ம் தேதி முதல் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி நடத்தப்பட்டு அதில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இவ்வாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் 67 நாட்கள் நடைபெறும் என்றும் முதல் கூட்டத்தொடரில் புதிய குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுள்ள திரௌபதி முர்மு இரு அவைகளிலும் உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என்றும் அதன் பிறகு மார்ச் முதல் ஏப்ரல் வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.