“நா ரெடி” வீடியோ பாடல் நாளை ரிலீஸ்!

Filed under: சினிமா |

கடந்த அக்டோபர் 19ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில், ரிலீசான திரைப்படம் “லியோ.”

சமீபத்தில் இத்திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள். “லியோ” திரைப்படம் உலகளவில் 600 கோடி ரூபாய் அளவுக்கு வசூலை அள்ளி உள்ளது. இதன் மூலம் 2.0 மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களுக்கு அடுத்த படியாக அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் “லியோ” உள்ளது. திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இப்போது லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நவம்பர் 23ம் தேதி லியோ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகும் என தகவல் வெளியானது. அனிருத்தின் இசையில் விஷ்ணுவின் வரிகளில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இப்படத்தின் முதல் சிங்கில் “நா ரெடிதான்” என்ற பாடல் வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என 7 ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.