நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கருக்கா வினோத் முழக்கம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

கருக்கா வினோத் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கத்துடன் நீதிமன்றத்துக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக ஆளுநர் ரவி தங்கி இருக்கும் கவர்னர் மாளிகைக்கு முன்பு கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல் குண்டு வீசியதற்காக கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை செய்வதில் ஆளுநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய காவலர்கள் அவரை அழைத்து வந்த போது பத்திரிகையாளரை நோக்கி அவர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சரமாரியாக முழக்கமிட்டார். இதையடுத்து கருக்கா வினோத்தை காவலில் எடுப்பதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் செய்தனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நீட் தேர்விற்கும் கருக்கா வினோத்திற்கும் என்ன சம்பந்தம் என்றும் போலீசாரால் ஜோடனை செய்யப்பட்டு அழைத்துவரப்பட்டு இருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.