நீர்வீழ்ச்சி அருகே செல்பி: மாணவருக்கு நேர்ந்த கதி

Filed under: தமிழகம் |

நீலகிரி, ஏப்ரல் 29

நீலகிரி மாவட்டம் குன்னூர் மரப்பாலம் அருகே செல்பி எடுக்க முயன்றபோது நீர் வீழ்ச்சியில் விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் பகுதியில் டீ கடை வைத்திருப்பவர் ஸ்ரீரிதரன் இவரது மகன் அகில் 20 வயது இவர் கோவை தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார், நேற்று மாலையில் குளிக்க ஆற்றுக்கு சென்றவர் அங்கிருந்த அருவி முன்பு செல்பி எடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது, மாலை ஆகியும் வீடு திரும்பாததால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வனத்துறையினர்,மற்றும் தீ அணைப்புத் துறையினர் இணைந்து நேற்று அப்பகுதிக்கு சென்ற போது இருட்டாகி விட்டதாலும் அங்கு யானைகள் நடமாட்டம் இருந்ததாலும் உடலை தேடும் முயற்சி கைவிடப்பட்டது இன்று காலை மீண்டும் மேட்டுப்பாளையம்த்தில் இருந்து பரிசல் கொண்டுவத்து தேடும் பணியினை பரிசல் உதவியுடன் மேற் கொண்டனர்,சுமார் 4 மணி நேர தேடலுக்குப் பின் உடலை ஆற்றில் கண்டெடுத்த தீயணைப்புத் துறையினர், உடலை கரைக்கு கொண்டு வந்தனர்.

செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து இறந்திருக்க வாய்ப்பிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவரது உடல் குன்னூர் அரசு லாலி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மாணவனின் இறப்பு பர்லியார் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.