ரஷ்யா இந்தியாவும் சீனாவும் எங்கள் முக்கிய கூட்டு நாடுகள் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் அமெரிக்கா உட்பட்ட நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு ஆண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் இந்தியா மற்றும் சீனா மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவளித்து, போரை நிறுத்த சமாதான பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் எங்களுடைய முக்கிய கூட்டணி நாடுகள் என ரஷ்யா பகிரங்கமாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் வெளியுறவு கொள்கை குறித்த 42 பக்க அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் போருக்கு பின்னர் இந்தியாவும் சீனாவும் ராணுவ ரீதியாகவும் அரசு ரீதியிலும் உறவுகளை தொடர்ந்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு, சிவில், அணுசக்தி, தீவிரவாத எதிர்ப்பு, விண்வெளி ஆய்வு மற்றும் அரசியல் ஆகிய உறவுகளில் இந்தியாவும் சீனாவும் தங்களுக்கு ஒத்துழைப்பை தந்து கொண்டிருக்கின்றன என்றும் அந்த அறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.