பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர் !

Filed under: தமிழகம் |

pachai_3162973g

மதுரை வைகை ஆற்றில் இன்று காலை பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரைத் திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா இன்று காலை 6.30 மணியளவில் நடைபெற்றது. ஆற்றில் இறங்கிய அழகர் மீது பக்தர்கள் தண்ணீரை பீச்சி அடித்து பரவசம் அடைந்தனர்.