படங்களின் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

Filed under: சினிமா |

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வெளியான விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை இடத்தில் தொடங்கி பின் திருவள்ளூரில் நடைபெற்றது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாம். இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வருகிறார். வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டு வருகிறார் என சொல்லப்பட்டது. ஒரு பேட்டியில் “விடுதலை 2” மற்றும் “வாடிவாசல்” ஆகிய படங்கள் பற்றி பேசியுள்ளார். அதில் “விடுதலை 2” ஷூட்டிங் இன்னும் 20 நாட்கள் உள்ளது. அதை முடித்துவிட்டு “விடுதலை 2” ரிலீசானதும், “வாடிவாசல்” தொடங்கும். அதற்கான முன் தயாரிப்பு வேலைகள் மூன்று மாதங்கள் நடக்கும்” எனக் கூறியுள்ளார்.