பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பா?

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை அண்ணா பல்கலைக்கழக நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த சில வருடங்களாகவே தமிழக அரசுக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. நாளை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொள்ள மாட்டார் என்றும் அவர் இந்த விழாவை புறக்கணிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாளை பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர் ரவி தலைமை விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டவர்களை வழங்க உள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்கிய ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பொன்முடி இந்த விழாவை புறக்கணிக்க இருப்பதாக கூறப்படுகிறது.