பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேச்சு- வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆர் எஸ் பாரதி கைது !

Filed under: அரசியல்,தமிழகம் |

பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேச்சு- வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆர் எஸ் பாரதி கைது !

திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இட ஒதுக்கீடு பற்றியும், நீதிபதிகள் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காககக் கைது செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர் எஸ் பாரதி, இட ஒதுக்கீடு என்பது திமுக போட்ட பிச்சை எனவும் அதனால் இப்போது ஒடுக்கப்பட்ட மக்கள் நீதிபதியாக வந்து அமர்ந்து இருப்பதாகவும் பேசினார். அவரின் இந்த பேச்சு பலத்த சர்ச்சைகளை எழுப்பிய நிலையில் பல அரசியல் தலைவர்கள் அதற்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இது பட்டியல் சமூக மக்களை புண்படுத்தும் விதமாக உள்ளதாக ஆதித்தமிழர் பேரவை அமைப்பைச் சேர்ந்த கல்யாண் குமார், மார்ச் மாதம், காவல்துறையில் புகார் அளித்தார்.  இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு ஆர்.எஸ்.பாரதி மீது எஸ்.சி.மற்றும் எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் இன்று காலை ஆர் எஸ் பாரதி தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவருக்கு இப்போது மருத்துவப் பரிசோதனைகள் செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது.  கைது செய்யப்படும் போது பேசிய அவர் ‘ இந்த கைது உள்நோக்கம் கொண்டது. நான் கொரோனா கருவிகள் வாங்கியது சம்மந்தமாக ஊழல் நடந்திருப்பது சம்மந்தமாக பேசியதால் கைது செய்யப்பட்டு இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.