பத்திரிக்கை ஆண்டுவிழாவில் முதலமைச்சர் பேச்சு!

Filed under: தமிழகம் |

முதலமைச்சர் மலையாள மனோரமா பத்திரிகையின் 75 வது ஆண்டுவிழாவில் நியூஸ் கருத்தரங்கில் மாநில அரசுகளை தன்னிறைவாக வைத்திருந்தால் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது, “75ம் ஆண்டு கொண்டாட்டம் என்பது வெறும் கொண்டாட்டமாக இல்லாமல், அடுத்த வளர்ச்சிக்கான திட்டமிடலாக இருக்கவேண்டும். மாநில அரசுகள் தன்னிறைவாகக இருந்தால்தான் இந்தியா வலிமையுடன் இருக்கும். ஒரு மாநிலம் தன்னிறைவு பெறுகிறது என்றால் அம்மாநிலம் வளார்ச்சியடைகிறது என்று அர்த்தம். இது மாநிலங்களின் வளர்ச்சி நாட்டை வளப்படுத்தும், பலப்படுத்தும். பள்ளி செல்லாமல் நின்ற குழந்தைகளைக் கணக்கெடுக்க உத்தரவிட வலியுறுத்து ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாடி, இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம், கேரளா கல்வியில் சிறந்து விளங்குகிறது என பாராட்டியுள்ளார்” என்று கூறினார்.