பயோபிக்கை நான் இயக்குகிறேனா? இயக்குனரின் பதில்!

Filed under: சினிமா |

இயக்குனர் ரமணா எம் எஸ் சுப்புலட்சுமி பயோபிக்கை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


பயோபிக்குகள் திரைப்படங்கள் பாலிவுட்டைப் போலவே கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளிலும் பயோபிக்குகள் உருவாகி வருகின்றன. அவ்வகையில் “நடிகையர் திலகம்“ மற்றும் “தலைவி” ஆகிய பயோபிக்குகள் அதிக வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றன. இப்போது இசைக்குயில் என அழைக்கப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு உருவாகப் போவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை சுரேஷ் சக்ரவர்த்தி இயக்க ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் தயாரிக்க உள்ளாராம். இத்திரைப்படத்தை “திருமலை,” “சுள்ளான்” மற்றும் “ஆதி” ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ரமணா இயக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். ஆனால் அவர் தன்னுடைய முகநூல் பதிவில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். “அன்பு முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள். நான் கர்னாடக பாடகி திருமதி. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் வாழ்கையை படமாக்குவதாக வலைதளங்களில் செய்தி வந்திருப்பதாய் அறிகிறேன், அதன் தொடர்பாய் என் நலம் விரும்பும் நண்பர்கள் வாழ்த்துகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஆனால் அந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக நான் அறிவிக்கவில்லை என்பதையும், நண்பர்கள் அச்செய்தியை பகிரவேண்டாம் என்றும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்” என விளக்கமளித்துள்ளார்.