கல்லூரி மாணவி ஒருவர் விழா ஒன்றில் திடீரென பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் தனியார் கல்லூரி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பலரும் தங்களுக்கு பிடித்த ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு மாணவி எழுந்து பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டார். இதனை பார்த்த மாணவர் ஒருவரும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என தெரிவித்தார். இதனால் மற்ற மாணவ மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாணவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மாணவர் மற்றும் மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் மாணவி மற்றும் மாணவர் ஆகிய இருவரிடமும் மன்னிப்புக் கடிதம் வாங்கி அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.