பாஜகவின் கேள்வி!

Filed under: அரசியல்,தமிழகம் |

பாஜக கட்சியினர் அண்ணாமலையின் கையில் கட்டியுள்ள கைக்கடிகாரத்தின் பில்லை காட்டினால் முரசொலியின் மூலப்பத்திரத்தை காட்டுவீர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமைச்சர் செந்தில் குமார் உள்பட பல திமுகவினர் கடந்த சில நாட்களாக அண்ணாமலை கையில் கட்டியுள்ள கைக்கடிகாரத்தின் பில் எங்கே என கேள்வி எழுப்பினர். இது குறித்த ஹேஷ்டேக் டுவிட்டர் உட்பட இணையதளங்களில் வைரலாகின. திமுகவினரின் கேள்விகளுக்கு அண்ணாமலை உள்பட பாஜகவினர் அதிரடியாக பதில் அளித்து வந்தனர். தற்போது பாஜகவின் சிடி நிர்மல் குமார் தனது டுவிட்டரில் “முரசொலி மூல பத்திரத்தை தமிழகமே கேட்டும் இதுவரை திராவிட கோமாளிகளிடம் எந்த பதிலும் இல்லை! நாளை கடிகாரத்தின் பில்லை கொடுத்தால் மூல பத்திரத்தை காட்டுவீர்களா அல்லது மக்கள் மன்றத்தில் திருடர்கள் என ஒப்புக்கொள்வீர்களா அறிவாலயம்? என்று அதிரடியாக பதிவிட்டுள்ளார்.