பாஜக எம்.எல்.ஏ.வின் கருத்து!

Filed under: அரசியல்,தமிழகம் |

பாஜக எம்எல்ஏ சரஸ்வதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அது பணநாயகம் வெற்றி பெற்றதாகத்தான் அர்த்தம் என்று கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியிலுள்ள சிஎஸ்ஐ பள்ளியில் இன்று மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி வாக்களித்தார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பணநாயகம் வென்றதாகவே கருதப்படும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. பணம் அளிக்காமல் வாக்களிப்பதற்கான மனநிலைக்கு மக்கள் மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணம் மற்றும் பரிசு பொருட்களை திமுகவினர் கொடுப்பதாக அதிமுகவினர் குற்றம் தாண்டி வரும் நிலையில் அதிமுகவினர்களும் பணம் கொடுப்பதாக ஒரு சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதையடுத்து யார் வெற்றி பெற்றாலும் அங்கு பணநாயகம் வென்றதாக கருதப்படும் என மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி தெரிவித்துள்ளார்.