பாடகி சங்கீதாவின் உடல் 12 நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த பிரபல பாடகி சங்கீதா. இவர் சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். இதுபற்றி அவரது பெற்றோர் போலீசில் புகாரளித்திருந்தனர். போலீசார் அவரை தேடிவந்த நிலையில் பைரோன் என்ற கிராமத்தில் பாடகியின் உடல் 12 நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு, இந்த வழக்கு டெல்லி போலீசுக்கு மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.