பாண்டிராஜ் – விஷால் மீண்டும் கூட்டணி!

Filed under: சினிமா |

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கார்த்திக் சுப்பராஜ், தன்னுடைய ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலமாக படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் அவர் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கிய டிஎஸ்பி படத்தைத் தயாரித்திருந்தார். படம் படுதோல்வியடைந்தது. அடுத்து அவர் விஷால் நடிப்பில் உருவாகும் படத்தை தயாரிக்க உள்ளார். இத்திரைப்படத்தையும் முதலில் பொன்ராம்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த படத்தை இயக்க பாண்டிராஜ் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. பாண்டிராஜின் கடைசிப் படமான “எதற்கும் துணிந்தவன்” படம் தோல்விப்படமாக அமைந்தது. விஷால் பாண்டிராஜ் கூட்டணியில் ஏற்கனவே “கதகளி” படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.