பார்த்திபன், லெஜண்ட் சரவணா படங்கள் ஓடிடி எப்போது?

Filed under: சினிமா |

“லெஜண்ட்”, “இரவின் நிழல்” ஆகிய படங்களின் ஓடிடியில் ரிலீசாவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

சமீபத்தில் ஒரு அறிமுக நடிகருக்கு இவ்வளவு அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்ட திரைப்படமா என வியக்க வைக்கும் அளவுக்கு வெளியானது ‘தி லெஜண்ட்’ திரைப்படம். அதிக விளம்பரங்களோடு ரிலீஸான இத்திரைப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனாலும் இப்படத்தை இன்னும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அதே போல பார்த்திபன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமான “இரவின் நிழல்” திரைப்படமும் இன்னும் ஓடிடியில் ரிலீஸாக வில்லை. இப்படத்தையும் திரையரங்கில் தவறவிட்டவர்கள் ஓடிடியில் காண ஆர்வமாக உள்ளனர்.