பிரபல இசையமைப்பாளருக்கு இரண்டாவது திருமணமா?

Filed under: சினிமா |

முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இமான் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்தார்.

இமான் மற்றும் மோனிகா ரிச்சர்ட் ஆகிய இருவரும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் மீது டி இமான் வழக்குப்பதிவு செய்துள்ளார். தனது குழந்தைகளின் ஒரிஜினல் பாஸ்போர்ட் தன்னிடம் இருக்கும் நிலையில் அதனை மறைத்துவிட்டு தனது முன்னாள் மனைவி மோனிகா குழந்தைகளுக்கு புதிய பாஸ்போர்ட்டை பெற்றுள்ளார் என்று அந்த மனுவில் கூறி இருந்தது பரபரப்பைக் கிளப்பியது.

இந்நிலையில் தற்போது இமான் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாகவும், அவரின் திருமணம் இம்மாதம் 15ம் தேதி நடக்க வாய்ப்புள்ளதாகவும் சொலல்ப்படுகிறது.