பிரபல நடிகர் ரசிகர்களின் செல்போன்கள் திருட்டு

Filed under: சினிமா |

ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகாபடுகோன் இணைந்து நடித்த “பதான்” திரைப்படம் வசூல் சாதனை படைத்தது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஜவான்” திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் “டன்கி” திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகவுள்ளது. நேற்று ஷாருகான் பிறந்த நாளையொட்டி அவரது வீட்டின் ரசிகர்கள் குவிந்தனர். அப்போது, ஷாருக்கான் செல்பி எடுத்துக் கொண்டார். அவரைப் பார்க்க வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்கள் கூட்டத்தில் திருடர்கள் புகுந்து 30 போன்களை திருடியதாகவும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.