பிரபல நடிகை பன் டாக்!

Filed under: சினிமா |

ரஜினியுடன் இணைந்து நடித்த பிரபல நடிகை நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்குச் சம்பளம் வேண்டும் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தி சினிமாவில் ஆஹா லைப், சாமந்த், ரத்த சரித்ரா, ரத்த சரித்ரா 2, தோனி, அந்தாதூன், உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இவர், தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து “கபாலி” படத்திலும், கார்த்தியுடன் இணைந்து “ஆல் இன் ஆல் அழகுராஜா” படத்திலும், “சித்திரம் பேசுதடி,” “வெற்றிச்செல்வன்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில், ராதிகா ஆப்தே பேட்டி ஒன்றில், “சினிமாத்துறையில், நடிகைகளுக்கும், மற்ற தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கு இணையான சம உரிமையுள்ளது. இதற்காக அவர்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். நடிகர்களுக்கு இணையான சம்பளம் நடிகைகளுக்கு வழங்க வேண்டும். சினிமாவிலும் சமத்துவத்தை அமல்படுத்த வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.