பிரபாஸ் ரசிகர்களின் கார் பேரணி!

Filed under: உலகம்,சினிமா |

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபாஸின் ரசிகர்கள் “புராஜக்ட் கே” திரைப்படத்திற்காக வித்தியாசமான முயற்சி மேற்கொண்டனர்.

பான் இந்திய ஸ்டாராக அறியப்படும் தெலுங்கு நடிகர் பிரபாஸின் அடுத்த படம் “புராஜக்ட் கே.” மகா நடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கி வரும் “புராஜெக்ட் கே” திரைப்படத்தின் ஹீரோவாக பிரபாஸும் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனும் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் இணைந்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மெகா பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஜிமிப்ஸ் வீடியோ அமெரிக்காவிலுள்ள காமிக் கான் மற்றும் பிரபலமான டைம்ஸ் ஸ்கொயரில் ஆகிய இடங்களில் ஜூலை 20ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும், இந்தியாவில் ஜூலை 21ம் தேதி இந்த ஜிலிம்ப்ஸ் வீடியோ ரிலீசாகும் எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள நடிகர் பிரபாஸின் ரசிகர்கள், ரசிகைகள் இன்று “புராஜெக்ட் கே” திரைப்படத்தின் “கே” என்ற எழுத்து வடிவில் காரில் பேரணி சென்றனர். இந்த ஜிலிம்ப்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், “புராஜக்ட் கே” திரைப்படத்தில், நடிகை தீபிகா படுகோனின் புதிய போஸ்டரை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.