பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஷாருக்கானுக்கு விருது !

Filed under: இந்தியா,உலகம் |

shahrukhkhan_2143460fஇந்தி நடிகர் ஷாருக்கானுக்கு சர்வதேச பன்முகத்தன்மை (குளோபல் டைவர்சிட்டி) விருது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டது.

உலக அளவில் பிரபலமாக விளங்குபவர்கள் மற்றும் குறிப் பிடத்தக்க சாதனை படைப்பவர் களுக்கு இந்த விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு இந்த விருதை ஜாக்கி சான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக் கான விருது வழங்கும் விழா லண்டன் நகரில் உள்ள இங்கி லாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 4-ம் தேதி நடந்தது. ஷாருக்கானி டம் விருதை இங்கிலாந்து நாடாளுமன்ற சபாநாயகர் ஜான் பெர்க்கோ வழங்கினார்.

இதுகுறித்து ட்விட்டரில் ஷாருக்கான் கூறும்போது, ‘‘இந்த விருது என்னை பெருமைப்பட வைத்துள்ளது. லண்டன் நாடாளு மன்ற அரங்கில் இந்த விருதைப் பெற்ற கணம் மிகவும் நெகிழ்ச்சி யோடு இருந்தேன். இங்கிலாந்து நாடாளுமன்ற சபாநாயகர், விரு துக் குழுவினர், விருதை வழங்கிய ரெயின்போ அறக்கட்டளை உட்பட அனைவருக்கும் நன்றி’’ என்று கூறியுள்ளார்.