“பிரின்ஸ்” திரைப்படம் ஓடிடியில் எப்போது?

Filed under: சினிமா |

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளிவந்த “பிரின்ஸ்” திரைப்படம் பிரபல ஓடிடியில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு கடந்த 21ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியானது. படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதனால் படம் ஒரு வாரத்துக்குள்ளாகவே பெரும்பாலான திரைகளிலிருந்து தூக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தை வாங்கிய அன்புச்செழியனுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்றால் தெலுங்கிலும் இப்படம் சுத்தமாக படுத்துவிட்டதாம். இதையடுத்து இப்படத்தை வாங்கியுள்ள டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் நவம்பர் 25ம் தேதி இரு மொழிகளிலும் ஸ்ட்ரீம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.