புதிய மோசடி குறித்து மின்சார வாரியம் எச்சரிக்கை!

Filed under: தமிழகம் |

ஆன்லைனில் மின்கட்டணம் கட்டலாம் என்ற வசதியை பயன்படுத்தி மோசடி கும்பல் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் திமுக பிரமுகரான பத்மப்ரியாவின் தந்தையின் செல்போன் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. மின்சார கட்டணத்தை கட்டாததால் மின் இணைப்பு இன்று இரவு நிறுத்தப்படும் என்றும் அதற்கு முன்னால் இந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் ஒரு எண் இருந்துள்ளது. அதை தொடர்பு கொண்டபோது சிலர் இந்தியில் பேசியுள்ளனர். இதுகுறித்து பத்மப்ரியா டுவிட்டரில் டாங்கெட்கோவை டேக் செய்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில் டாங்கெட்கோ தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் “நுகர்வோர் கவனத்திற்கு, இந்த போலியான குறுஞ்செய்தி பரவி வருகிறது. இது போன்ற குறுஞ்செய்தி ஒருபோதும் எங்களிடமிருந்து வரவில்லை. இதை பொருட்படுத்த வேண்டாம்” என தெரிவித்துள்ளது.