புதுச்சேரியில் முழு அடைப்பு; வாகனங்கள் மீது கல்வீச்சு!

Filed under: தமிழகம் |

அதிமுக சார்பில் புதுச்சேரி யூனியனுக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. தற்போது வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்வது வழங்க வேண்டுமென வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. இப்போராட்டத்தினால், புத்தாண்டு விற்பனை பாதிப்பு ஏற்படுத்தும் என திமுக, காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இன்று காலை 6:30 மணி முதல் தொடங்கியுள்ள போராட்டத்தால் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன, போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயங்கி வருகிறது. இப்போராட்டத்தின் போது 2 டெம்போக்கள் மீது கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.