புதுவை அரசு வெளியிட்ட பெண் ஊழியர்களுக்கான அறிவிப்பு!

Filed under: அரசியல்,புதுச்சேரி |

அரசு பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேரம் பணிச் சலுகை வழங்குவதாக புதுசை அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் அரசுத் துறைகளில் பணியாற்ற்றும் பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று காலை நேரம் 2 மணி நேரம் பணி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிச்சலுகை அறிவிப்பை இன்று முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கவர்னர் தமிழிசை கூட்டாக அறிவித்தனர். இதற்கான அரசாணை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், வெள்ளிக்கிழமை தோறும் பெண்களின் பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் பூஜை செய்ய வெள்ளிக்கிழமைகளில் காலை 8.45 மணி முதல் 10.45 மணி வரை என 2 மணி நேரம் பணிச்சலுகை வழங்கப்படும். மாதம்தோறும் 3 வெள்ளிக்கிழமைகளில் இந்த அனுமதியை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், இந்த விடுப்புக்கு அனுமதி வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். மேலும், அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் மட்டும் இருந்தால், நிர்வாகத்தின் நலனைபொருட்டு, ஒரே நேரத்தில் இச்சலுகை பெறக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.