புயல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Filed under: தமிழகம் |

சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு மாண்டஸ் புயல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் சென்னையிலிருந்து 620 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்ககூடும் என்றும், இதனால் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயலின் வேகம் மணிக்கு 6 கிமீ வேகத்திலிருந்து 11 கிமீ ஆக அதிகரித்துள்ளது. எனவே நாளை நள்ளிரவில் புதுச்சேரியிலிருந்து ஸ்ரீகரிகோட்டா இடையே மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.