புயல் பற்றிய தகவலளித்த சென்னை வானிலை மையம்!

Filed under: தமிழகம் |

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை புயல் கரையை கடக்கும் என கூறியுள்ளார்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 770 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும் மணிக்கு 15 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்து வரும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். எனவே இந்த புயல் இன்று மாலை கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.