“பையா 2” ஹீரோயின் இவர்தானா?

Filed under: சினிமா |

கடந்த 2011ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் “பையா.”

இத்திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. இப்போது படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளார் இயக்குனர் லிங்குசாமி. ஆனால் ஹீரோவாக கார்த்திக்கு பதில் ஆர்யா நடிக்கிறார். லிங்குசாமியே தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்கப் போவது யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. முதலில் ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஜான்வி கபூர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தில் அறிமுகமாகிறார். அதனால் இப்போது பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கதாநாயகி மற்றும் மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.