‘பொன்னியின் செல்வன்’ டீசர் ரிலீஸ்!

Filed under: சினிமா |

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” திரைக்கு வரவிருக்கும் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு மிகச்சரியாக வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு நிமிடம் 20 வினாடிகள் உள்ள இந்த டீசரில் பிரம்மாண்டமான காட்சிகளை பார்த்து கோலிவுட் பட உலகினர் மற்றும் ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.


ஒவ்வொரு காட்சியையும் “பொன்னியின் செல்வன்” நாவலில் உள்ளது போலவே மணிரத்னம் செதுக்கியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்துள்ளனர். தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தும் இப்படம் அனைத்து வசூல் சாதனைகளை முறியடிக்கும் என்றும் இத்திரைப்படம் தமிழ்சினிமாவின் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய படம் என்று ரசிகர்கள் கமெண்ட் அளித்துள்ளனர். இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக ஒரு திரைப்படத்தை மணிரத்னம் தவிர வேறு யாராலும் எடுக்க முடியாது என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.