பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வு!

Filed under: தமிழகம் |

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் கல்விக்கான கலந்தாய்வு தேதியை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்த நிலையில் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து உள்ளனர். பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 25ம் தேதி முதல் நடைபெறும் என்றும் இந்த கலந்தாய்வு அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதையடுத்து பொறியியல் கல்லூரிக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இவ்வாண்டு பொறியியல் கல்லூரிகளை விட கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு தான் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.