போனில் அழைத்து உதவி செய்த சூப்பர் ஸ்டார்!

Filed under: சினிமா |

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் இருந்த தயாரிப்பாளர் வி.ஏ.துரையை போனில் அழைத்து பேசியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தயாரிப்பாளர் தன் உடல்நிலை குறித்து வெளியிட்ட வீடியோவில் ரஜினிகாந்த் போன்றவர்கள் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் தன்னை தற்போது தனது நண்பர்கள் காப்பாற்றி வருகிறார்கள் என்றும் ஆனாலும் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும் தெரிவித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வி.ஏ.துரையிடம் போனில் அழைத்துப் பேசியுள்ளார். “நான் இருக்கிறேன் கவலைப்படாதீர்கள், எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன், ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்தவுடன் உங்களை நேரில் சந்திக்கிறேன்,” என்று ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நடிகர் சூர்யா தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு ரூபாய் 2 லட்சம் ரூபாய் உதவி செய்துள்ளார்.