“மகாராஜா” திரைப்படம் துபாய், புர்ஜ் கலிஃபாவில்!

Filed under: சினிமா |

பேஷன் ஸ்டூடியோஸ் மிகச்சிறப்பான கதைகளைத் தேர்ந்தெடுத்து அதனை உயர்தரமான தயாரிப்பு மதிப்பீட்டுடன் தமிழ் சினிமாவுக்கு வழங்கி வருகிறது. “தி ரூட்” நிறுவனத்துடன் பேஷன் ஸ்டூடியோஸ் கைக்கோத்து இன்னும் நல்ல திரைப்படங்களை வழங்க இருக்கிறது.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான “மகாராஜா” வர்த்தக ரீதியாக எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. கவனம் ஈர்க்கும் காட்சிகளுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் இப்படம் ஜூன் 14, 2024 அன்று வெளியாகிறது. விஜய் சேதுபதியின் 50வது படம் என்பதால், இச்சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவின் ‘மகாராஜா’ திரைப்படம் இடம்பெறும் நிகழ்வை பேஷன் ஸ்டூடியோஸ் நடத்தியது. நடிகர் விஜய் சேதுபதி எப்போதுமே துபாய் மக்களிடம் இருந்து அபரிமிதமான அன்பையும் ஆதரவையும் பெற்று வருகிறார். விஜய் சேதுபதி தனது ஆரம்ப நாட்களை துபாயில் கழித்ததால், இந்த நாட்டு மக்களிடமிருந்து விருந்தோம்பல் மற்றும் பாசத்தைப் பெற ஒருபோதும் தவறவில்லை. நேற்று மாலை (ஜூன் 6), புர்ஜ் கலிஃபாவில் பிரமிக்க வைக்கும் ’மகாராஜா’ படம் இடம்பெற்றிருந்ததை அங்கிருந்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் அனுராக் கஷ்யப் கலந்து கொண்டார் மற்றும் நிகழ்வில் படக்குழுவினரும் இருந்தனர். “தி ரூட்’டின் ஜெகதீஷ் பழனிசாமியுடன் இணைந்து பேஷன் ஸ்டூடியோஸின் சுதன் சுந்தரம் தயாரித்துள்ள படம் “மகாராஜா”. இப்படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார்.