மகேஷ் பாபுவின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு?

Filed under: சினிமா |

கடந்த ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் ரிலீசான “சர்காரு வாரிபாட்டா” திரைப்படம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.

அவரின் அடுத்த திரைப்படம் பற்றிய கேள்விகள் எழுந்தன. ராஜமௌலி இயக்கத்தில் அவர் ஒரு படம் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. அதற்கான வேலைகளை ராஜமௌலி தொடங்கிவிட்டார். ஆனால் ஷூட்டிங் தொடங்க எப்படியும் ஒரு வருடத்திற்கு மேலாகும் என்பதால் இப்போது மகேஷ் பாபு தன்னுடைய அடுத்த படமாக திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் அமலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இது மகேஷ் பாபுவின் 28வது படம். இந்த படத்தின் டைட்டிலே இன்னும் அறிவிக்கப்படவில்லை. படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு இந்த படம் ரிலீசாக உள்ளது. அதே தேதியில் பிரபாஸின் புராஜெக்ட் கே திரைப்படம் ரிலீசாக உள்ளது.