மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்த விஜய்!

Filed under: சினிமா |

இன்று மாலை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நடிகர் விஜய் சந்தித்த வீடியோ வெளியாகும் என்று புஷ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் “வாரிசு” திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், “லியோ” படத்தில் நடித்து வருகிறார். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் விலையில்லா விருந்தகத்தைச் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் விலையில்லா விருந்தகத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வரும் மக்கள் இயக்க நிர்வாகிகள விஜய் சந்தித்தார். இந்த வீடியோ எப்போது வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் கேட்டிருந்தனர். இன்று மாலை 6 மணிக்கு TVMIoffl #YouTube சேனலில் வெளியாகும் என்று புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.