மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ம் தேதி உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ஏப்ரல் 16ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ஏப்ரல் 16ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறையாக அம்மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.