மருத்துவமனையில் தகராறு செய்த மேயர்

Filed under: அரசியல்,இந்தியா |

தற்போது உத்தரபிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடைபெற்று வருகிறது.

பாஜக மேயர் சுஸ்மா கார்வெல், லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனை வருகை தந்தார். அங்குள்ள ஐசியு அறைக்குள் ஷூ அணிந்துகொண்டு நுழையும்போது, பணியாளர்கள் அவரை தடுத்ததாகவும், இதில், மேயர் மற்றும் பணியாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர், மருத்துவமனை வளாகத்திற்கு ஒரு புல்டோசர் வரவழைக்கப்பட்டதாகவும், இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகிறது. இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகம் மேயர் வருகையில் பிரச்சனை எதுவுமில்லை என்று கூறியுள்ளது.