மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை!

Filed under: இந்தியா |

கேரளாவில் சமீபத்தில் பெண் டாக்டர் நோயாளி போல் வந்தவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கேரள மாநில அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. எர்ணாகுளத்தில் பெண் மருத்துவர் ஒருவரை நோயாளி ஒருவர் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரளா மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தில் தற்போது கேரளா அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி இனிமேல் மருத்துவர் மீது தாக்குதல் நடந்ததாக புகார் அளிக்கப்பட்டால் 60 நாட்களுக்குள் அந்த வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் புகார் உறுதி செய்யப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்றும் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.